தமிழ் காதல் கவிதைகள் | Love Quotes in Tamil

128 0
Love Quotes in Tamil

காதலர்களுக்கான கவிதைகளின் தொகுப்பு – Collection of Best Love Qutoes, Love Quotes in Tamil, Latest Tamil Love Quotes

நாம் நேசிப்பவர் நம்மையும் நேசித்தால்

அதை விட சந்தோஷம்

வேறு எதுவும் இல்லை

 

உயிராக இருப்பவர்களிடம்

உரிமையாக இருப்பதை காட்டிலும்

உண்மையாக இருப்பது தான் முக்கியம்

 

நீ நிலவும் இல்லை

நட்சத்திரமும் இல்லை

இவைகளை எல்லாம் அள்ளி

சூடிக்கொள்ளும் வானம் நீ…!!!!!

 

என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்

என் வாழ்வின் வசந்த காலங்கள்

 

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை…

 

நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம் ஆனால், உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்!

 

நம்மை முழுவதும் புரிந்துக் கொண்ட ஒருவர்

நம் வாழ்வில் இருப்பது

நமக்கு கிடைத்த மிக பெரிய வரம்

Love Quotes in Tamil – Part 1

என்னோடு நீ கூட இருக்கும் நேரம் தான்

என் வாழ்வின் வசந்த காலங்கள்

 

நேற்று வரை எதையோ தேடினேன்..

இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக

 

தோற்று தான் போகிறது என் கோபங்கள்

உன் அன்பிற்கு முன்னால்

 

நீ என்னை விட்டு

விலக நினைக்கும்

அந்த நொடிக்கு முன்

நீ நினைத்து பார்க்க முடியாத

தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்…

 

என்னுடைய சிறு இதயத்தில்

உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு

காரணம் உன் அன்பு

 

வாழ்க்கை படகில்

நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்

அதுவும், எனக்கு பிடித்த

உன்னுடன் மட்டுமே

Love Quotes in Tamil – Part 2

விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல்

கடைசி வரைக்கும் விட்டு விடாமல்

வாழ்வதும் தான் காதல்

 

புரிந்துக்கொள்ளும் வரை

எதையும் ரசிக்கவில்லை

புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர

எதையும் ரசிக்கமுடியவில்லை.

 

இனிமேல் தேடினாலும் கிடைப்பதில்லை

உன்னை போல ஒரு இதயத்தை

என் வாழ்க்கையில்

 

நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால்

நான் காற்றில்லா தேசத்திலும்

உயிர் வாழ்வேன்…

 

நாம் நேசிப்பவர்

நம்மையும் நேசித்தால்

அதை விட சந்தோஷம்

வேறு எதுவும் இல்லை

 

நீ என்னை விட்டு

விலக நினைக்கும்

அந்த நொடிக்கு முன்

நீ நினைத்து பார்க்க முடியாத

தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்…

 

மனவருத்தங்கள் ஆயிரம் இருந்தாலும்

வேண்டுதல் யாவும் உனக்காக..

 

நம்முடைய சூழ்நிலையை

புரிந்துக் கொண்டு எல்லா நிலையிலும்

நம்மோடு இருக்கும் உறவு கிடைப்பது வரம்

Love Quotes in Tamil – Part 3

யார் இல்லாமல்

வாழ முடியாதோ

அவர்களோடு வாழ்வது தான்

மகிழ்ச்சியான வாழ்க்கை

 

நேற்று வரை எதையோ தேடினேன்..

இன்று என்னையே தேடுகிறேன்

உனக்காக

 

நீ மூச்சி காற்றுப்படும் தூரத்திலிருந்தால்

நான் காற்றில்லா தேசத்திலும்

உயிர் வாழ்வேன்…

 

இதனால் தான் பிடிக்கும்

என்ற காரணமே இல்லாமல்

பிடித்தது, உன்னை மட்டும் தான்!

 

தொலைவேன் என்று தெரியும்

ஆனால் உனக்குள் இப்படி

மொத்தமாய் தொலைவேன் என்று

நினைக்கவில்லை

 

கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த

என் வாழ்க்கையில்

எனக்கு கிடைத்த

முதல் சந்தோசம்

உன் அன்பு

 

நம்மை நேசிக்க

ஆயிரம் பேர் இருந்தாலும்

நாம் நேசிக்கும் ஒருவரை போல்

ஆகி விட முடியாது

 

வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ

எப்போதும் நான்

உன் கூடவே இருப்பேன்

Love Quotes in Tamil – Part 4

நீ எதுவாயினும்

எனக்கு பிடிக்கும்

என்ற மனநிலை

அழகானது காதலில்

 

என்னுடைய சிறு இதயத்தில்

உன் மீது பெரிய காதல் இருப்பதற்கு

காரணம் உன் அன்பு

 

உன் பாசம் மட்டும்

போதாது உன் கோபம்

தான் உன்னை அதிகம்

நினைவூட்டுகிறது

 

அழகை எதிர்பாக்கும் பெண்களிடம்

அன்பை காட்டாதே

உன்னிடம் அன்பு வைக்கும்

பெண்ணிடம் அழகை

எதிர் பாக்காதே.

 

மொழியில் பேசிடு

விழியில் பேசி

வீழ்த்தாதே

 

கிடைப்பது நீயாக இருந்தால்

இழப்பது எதுவாக

இருந்தாலும் சம்மதம்

 

என் கண்களுக்கு

நீ காட்டிய அழகை விட

என் உள்ளத்துக்கு

நீ காட்டிய

அன்பே உயர்ந்தது!

Love Quotes in Tamil – Part 5

உன் முந்தானையில்

ஒரு முகக்கவசம் கொடு

ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன் இன்றி

வாழ்கிறேன் உன்னுடன் நான்

 

மன்னித்து விடு

என்பது அன்பு

அதை அப்போதே

மறந்து விட்டேன்

என்பது பேரன்பு

 

என் கரவம்

வீழந்ததடி

 

அன்பிற்கும்

பிறர் அறியாமல்

அடைத்து வைக்கும்

தாழ் உண்டோ?

 

நான் அதிகமாக கோவப்படுவேன்

Daily உன் கூட சண்டை போடுவேன்

ஆனால் ஒரு போதும்

உன் கூட பேசாமல் இருக்க மாட்டேன்

 

இந்த உலகத்தில்

உன்னை போல் ஒருவரும் இல்லை

என்பதை விட என் உள்ளத்தில்

உன்னை தவிர ஒருவரும் இல்லை

என்பதே சரி

Love Quotes in Tamil – Part 6

நீ வாழும் காலம்

வரை நான்

வாழ்ந்தால் போதும்

 

விடியற்பொழுதில் வெளிச்சம் பரவுவதைப்போல்

உன் வருகைப்பொழுதெல்லாம்

காதல் பரவி அழகாகிறது

என் உலகம்.

 

உனக்காக வாழ ஆரம்பித்து விட்டேன்

என் வாழ்க்கையே நீயென்று

உணர்ந்து விட்டதால்

 

நம்மை உண்மையாக நேசிப்பவர்களுக்காக

நம்மை நாம் மாற்றி கொள்வதில்

தவறு ஒன்றும் இல்லை

 

நேசிக்கிறேன் உன்னை

முதலாக மட்டுமல்ல

முழுவதுமாக

 

நான் உன்னிடம் எதிர்பார்ப்பது

நீ எனக்காக செலவிடும்

அந்த கொஞ்ச நேரத்தை மட்டுமே

 

என் தேடலில் கிடைத்த

மிக சிறந்த பொக்கிஷம்

நீ மட்டுமே

 

என் கால்களை உன்னை

நோக்கிக் கவர்ந்திழுக்கிறது

உந்தன் குறுநகை

 

உனக்காக நான் இருக்கிறேன் கவலைப்படாதே

என்பதை விட பெரிய ஆறுதலை

உன்னிடம் என் மனம்

எதிர்பார்க்கவில்லை

 • Love kavithai tamil
 • Tamil love captions for instagram
 • லவ் கவிதைகள்
 • லவ் கவிதை தமிழ்
 • லவ்
 • லவ் கவிதை
 • லவ் கவிதை தமிழ் லிரிக்ஸ்
 • லவ் ஸ்டேட்டஸ்
 • லவ் ஸ்டேட்டஸ் தமிழ் டவுன்லோட்
 • லவ் ஸ்டேட்டஸ் டவுன்லோட் வாட்ஸ்அப்
 • லவ் ஸ்டேட்டஸ் நியூ

புன்னகையால் என்னை

அணைத்து கொள்கிறாய்

உனக்குள்ளே தொலைந்து

நீயாய் ஆகின்றேன் நான்

Love Quotes in Tamil – Part 7

உன் பார்வையில்

தொலைந்தது நான்

மட்டுமல்ல என்

கோபங்களும் தான்

 

எதிர்பார்ப்புகள் இல்லாத

பாசம் ஒரு வரமே

 

ஒருவர் மீது

காதல் வர ஒரு காரணம் இருக்கும்

ஆனால் அந்த காரணம் தான்

யாருக்கும் தெரிவதில்லை

 

பிடித்தவர்களுடன் நாம்

சண்டை போடுவது

அவர்களை பிரிவதற்காக

இல்லை பிரிந்துவிட

கூடாது என்பதற்காக

 

எழுதியும் முற்றுப்

பெறாத ஓரே கவிதை

அவன் மட்டுமே

 

கடவுளிடம் வேண்டுதலென்று எதுவுமில்லை

வரமாக நீ கிடைத்ததற்கு

நன்றி சொல்லுவதை

தவிர

 

உன்னோடு தொடங்கிய என்

வாழ்க்கை உன் கைகோர்த்து

உன்னோடே முடிய விரும்புகிறேன்

 

பார்த்த முகம்

மறந்து போகலாம்

ஆனால் பழகிய இதயம்

ஒரு போதும் மறந்து போவதில்லை

Love Quotes in Tamil – Part 8

உன்னில் என்னை

தொலைத்தத் தருணம்

என்றுமே மீளக்கூடாதத் தருணம்

 

உன்னைக் காணாத நொடிகளில்

நான் இருண்டு போன உலகத்தில்

இருப்பது போல் உணர்கிறேன்

 

அவள் கண்களை பார்த்து தான்

கவிதை என்ற பெயரில்

கிறுக்க தொடங்கினேன்

வரிகளாக அவளுக்காக

 

தினமும் நிழலாய் தொடர்கிறேன்

நீ என் ஒளி என நினைத்து

Tamil Kadhal Kavithai Collections.

சிறுசிறு சண்டைகள்

காதலின் அம்சம்

பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ❤️

 

தோற்றுத்தான் போகின்றது

என் பிடிவாதம்

உன் அன்பின் முன் 💓

 

நீயருகிலிருந்தால்

இருளிலும் நான்

பௌர்ணமியே…

 

கவிதை எழுத காதல் தேவையில்லை…..

பெண்களின் அழகை

ரசிக்க தெரிந்தாலே போதும்…….!!!!

 

வருடாவருடம் பூ புதிதாகலாம் But

வாங்கும் கொடுக்கும் கை

மாறக்கூடாது……..

( காதலர்தினம் )

 

உன்

அன்பெனும்

எண்ணெய்

வற்றாதவரை

நானுமோர்

சுடர்விட்டெரியும்

விளக்கே

Love Quotes in Tamil – Part 9

உன்னை பிடித்துவிட்டதால்

இனி உனக்கு பிடிக்காதது

எனக்கும் பிடிக்காது…

 

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்

 

சின்னச்சின்ன

ஊடல்கள்

உன்னை

பிரிவதற்கல்ல

நம் காதலை

வளர்ப்பதற்கு

 

நீ

உடனில்லாத போது

உன் நினைவுகளுடன்

பயணிக்கின்றேன்

 

விடுவிக்க

முயன்றும்

தோற்றுப்

போகிறேன்….உன்

பார்வை

பிடியிலிருந்து

 

உன் நினைவுகளோடு பேசிப்பேசி

ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்

 

சோகங்கள்

இதயத்தை

துளைக்கும்

போதெல்லாம்

புல்லாங்குழலும்

கண்ணீர்

வடிக்கின்றது

 

இவள் மறைய அவன் வர அவன்மறைய

இவள் வரவென்று வானிலும் ஓர்

கண்ணாமூச்சி

 

நடுநடுங்கும் குளிரில்

அணைத்துக்கொண்டே

உளறாமல் பேசு என்றான்

 

எனக்காக நீ விட்ட

ஒரு சொட்டு

கண்ணீர்….

உனக்காகவே

வாழவேண்டுமென்று

இதயத்தில்…

உறைந்துவிட்டது

Love Quotes in Tamil – Part 10

நாணத்திற்கு

விடுதலை

கொடுத்தேன்

வளையல்களும்

தலைக் கவிழ்ந்தது

 

கரைசேர

துடுப்பிருந்தும்

கரையேறும்

எண்ணமில்லை

நிலவொளியில்…உன்

நினைவுகள்

நிறைந்திருப்பதால்

 

நீ மௌனமாகும் போதெல்லாம்

என் கவிதைகளும்

கண்ணீர் வடிக்கின்றது…

 

விழிகளுக்குள்

நீயிருக்கும் வரை

என் கனவுகளும் தொடரும்…

 

படிக்காமலேயே

மனப் பாடமாகிப்போனது

உன் நினைவுகள்

 

சிறை

வாழ்க்கையும்

பிடிக்கும்

அது உன்

இதயமென்றால்

 

கவிதை வரியின் சுவை

அர்த்தம் புரியும் வரையிலாம்…..

உன் விழிக்கவிதையின்

அர்த்தம் புரிந்தபின்னே

நான் சுவைக்கவே

ஆரம்பித்தேன்

 

ஒரு நொடி வந்து போனாலும்

மனதை ரணமாக்கியே

செல்கிறது சில நினைவுகள்…

Love Quotes in Tamil – Part 11

என்னருகில்

நீயிருந்தால்

தினமும்

பௌர்ணமியே

 

நினைவென்றாலே…

அது நீயானாய்…

 

கெஞ்சலும்

கொஞ்சலும்

காதலில்

அழகு

 

தொலைவேன் என்று

தெரியும் ஆனால்

உனக்குள் இப்படி

மொத்தமாய்

தொலைவேன் என்று

நினைக்கவில்லை

 

வார்த்தைகள்

ஊமையாக

உன்வசமானேன்

 

காதல் மழையில்

குடை நனைய….

குடைக்குள் காதலில்

நாம் நனைகிறோம்…..

 

நிலைக் கண்ணாடி

என் முகத்தை காட்டினாலும்

மனக் கண்ணாடியில்

உன் முகத்தையே

ரசிக்கின்றேன்

 

கண்களுக்குள் என்னவர்

கனவே கலையாதே

Love Quotes in Tamil – Part 12

தொலை(ந்த)த்தஒன்று

உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்…

 

என்னவரின்

அன்பில்

எல்லையற்ற

மகிழ்ச்சியில்

நான்…….

 

என் வானம் நீ

தேய்ந்தாலும் மறைந்தாலும்

மீண்டும் வலம்வரும்

நிலவாய் நான்…

 

காதல் தூறல் போட

சட்டென

வானவில்லாய்

ஆனது மனம்…

Love Quotes in Tamil – Part 13

மனக்கடலில்

நீ குதிக்க

மூழ்கிப்போனேன் நான்

 

சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி

இதமாகவே இருந்தது

உன் அன்பில்

 

உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை

உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

 

பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்…

இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்

 

குளிர் காலத்தில் நான் வாடினால்

உன் பார்வைதான் என் போர்வையோ

 

சுத்தமாய் என்னை மறந்து போனேன்

மொத்தமாய் நீ அள்ளும் போது

 

உன்னுள் உறைந்து

உலகம் மறக்க

ஆசையடா

Love Quotes in Tamil – Part 14

கண்களில் கைதாக்கி

இதயத்தில் சிறைவைத்து

உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்

 

உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு

இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு

 

நேற்று வரை எதையோ தேடினேன்

இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக

 

எனக்கு

இன்னொரு தாய்மடி நீயடா…

 

மறக்க தவிக்கும் நீயும்

மறக்க முடியாமல் நானும்

 

நீ வெறுக்கும் ஒவ்வொரு முறையும்

இதயம் சிதறிதான் போகிறது

 

சந்தோஷமாய் பறக்கின்றேன்

சிறகுகளாய் நீ இருப்பதால்

Love Quotes in Tamil – Part 15

மார்கழி குளிரும்

இதமான வெப்பமானது

உன் நினைவுபுள்ளியில்

கோலத்தை ஆரம்பித்தபோது

 

இதயம் என்ன போர்க்களமா…

உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே…

 

என்னவனுக்குள்

தொலைந்த நொடியிலிருந்து

தினமும் எனக்கு காதலர் தினமே

 

காதல் சிலருக்கு

கண்ணீரின் காவியம்

பலருக்கு அழகிய ஓவியம்

 

கடலில்

விழுந்த

நீர்துளிப்போல்

உன்னில்

கலந்துவிட்டேன்

 

கட்டிலறையோடு முடிவதல்ல காதல்

கல்லறைவரை தொடர்வதே காதல்

 

ஆசை

ஊற்றெடுக்கும்

போதெல்லாம்

அணைபோடுகிறது

நாணம்…….

Love Quotes in Tamil – Part 16

தழுவிச் செல்லும்

காற்றிலும் உன்

நினைவுகளே

கூந்தலை

கலைத்துச் செல்கையில்…

 

புரிந்துக்கொள்ளும் வரை

எதையும் ரசிக்கவில்லை

புரிந்துக்கொண்டபின்

உன்னை தவிர எதையும்

ரசிக்கமுடியவில்லை…

 

அகிம்சையாக உள்ளே நுழையும்

சில நினைவுகள்

வெளியேறும் போது

போர்க்களமாக்கிவிட்டு

செல்கிறது மனதை…

 

ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய்

என் விழிகள் தான்

ஏனோ உன் வழியை தொடர்கிறது…

 

மனதிலுள்ள

ஆசையெல்லாம்

நீ பார்க்கும் போது

நாணத்தில்

மறைந்துக்கொ(ல்) ள்கிறது

விழிகளை மூடிக்கொள்

என்னாசைகளை நிறைவேற்ற

Love Quotes in Tamil – Part 17

அன்பெனும்

மாளிகையில்

அழியாத

பொக்கிஷம்

நம் அழகிய

நிகழ்வுகள்

 

உன் நெஞ்சத்தின்

பஞ்சணையில்…

என் கவலைகளும்

உறங்கிவிடும்

 

என்ன மாயம் செய்தாய்

உனக்கெழுதும் வரிகளெல்லாம்

மாயமாக மறைகிறதே

 

நீயில்லா நேரம்

நினைவுகள் பாரம்

 

ஆயுளின் காலம்

எதுவரையென்று

தெரியாது ….

ஆனால் உனதன்பிருக்கும்வரை

என் ஆயுளிருக்கும்…

 

விழி பார்த்து

பேசு என்கிறாய்

உன் விழி நோக்க

மொழிகளும்

மறந்து போகிறது…

 

காத்திருந்து

களைத்துவிட்டது

கண்கள்

கனவிலாவது

கலந்துக்கொள்

 

தனிமையை

நேசிக்கின்றேன்

உன் நினைவுகளுக்காக…

 

நீ வெட்கித்தலை குனிந்து

கொலுசுமாட்டும் அழகில்

நான் சொக்கித்தான்

போகின்றேன்…

 

உன் தொலைதூர

பயணத்தில் என்னையும்

சுகமாகவே சுமந்துச்சென்றிருகிறாய்

என்று விடாமல் ஒலிக்கும்

உன் தொலைதூர குரல்

சொல்லாமல் சொல்கிறது…

Love Quotes in Tamil – Part 18

விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன்

விழிமூடாமல் உன் நினைவில்…

 

எனையறியாமல்

உறங்கிப்போனேன்

உனதன்பில்…

 

தனிமையின்

இடைவெளியை

நிரப்புகின்றது

உன் …..

நினைவுகள்…

 

அடிக்கடி நினைக்க வைத்து

கன்னத்தை நனைத்துச்

செல்கிறாய்…

 

காற்றோடு வந்த காதல் மொழியில்

நான் காத்தாடியானேன்…

 

வாடிய மனம் வானவில்லானது

உன் வருகையை கேட்டு…

 

மொழியில்

சொல்லத்தயங்கும்

ஆசைகளையெல்லாம்

விழியில்

கொட்டித்தீர்க்குறேன்…

 

என்னைவிட நம் காதலை பாதுகாத்தது

நீ நான் தவறவிட்டபோதெல்லாம்

தாங்கி பிடித்தாய்…

 

இரவும்

கடந்துக்கொண்டிருக்க…

உன் நினைவுகள்

உரசிக்கொண்டிருக்க….

என் உறக்கமும்

தொலைந்துக்கொண்டிருக்கு

 

நீ பொழியும்

அன்பின்

அருவியைவிடவா

இந்த

மலையருவி என்னை

மகிழ்விக்கபோகிறது…

 

தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்

வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது…

Love Quotes in Tamil – Part 19

உன்

நினைவுத்…

தென்றலில்

நானுமோர்

ஊஞ்சலாகின்றேன்

 

ஆசைகள் கடலாய்

பொங்க……

வெட்கங்கள் அலையில்

அடித்துச்செல்ல……

அச்சங்கள் கரையொதுங்க

முத்தங்களும் தொடர்ந்தது…..

 

புயலைவிட

வேகமாக

தாக்குகிறது

உன் பார்வை…..

கொஞ்சம்

தாழ்த்திக்கொள்

நான்

நிலையாக

நிற்க….

 

தொல்லைகள்

செய்யாமல்

தொலைவாகவே

தொடர்ந்து

என்னை

உன்னில்

தொலைக்க

செய்தாய்.

 

விழிகள் அடிக்கடி

மோதிக்கொள்ள

இதயங்கள் ஒன்றானது…

 

நிசப்தமான இரவில்

உன் நினைவுமோர்

அழகிய கவிதை…

 

விழித்துக்கொண்ட நினைவுகள்

உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது…

 

பிடிவாதத்தில்

ஜெயிப்பதைவிட

உன் அன்பிடம்

தோற்பதையே

விரும்புகிறேன்.

 

தனிமையை

இனிமையாக்க

உன்

நினைவுகளால்

மட்டுமே முடியும்…

 

மேகங்கள் சூழ்ந்த

நிலவாய் நான்

காற்றாகி ஒளித்தந்தாய் நீ

 

என்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான்…

அருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்…..

 

நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை…

மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை..!!

 

தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை…

உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது…

Love Quotes in Tamil – Part 20

ஏட்டில்

படித்த

எதுவும்…

மன

ஏட்டில்

பதியவில்லை…

உன்

நினைவுகளை

தவிர

 

வாடிய காதலுக்காக

தினமும் புதிதாய்

பூக்கின்றது கவிதை

 

நீங்காத இரவொன்று

வேண்டும்….அதில்

நிலையான கனவாக

நீ நிலைக்க வேண்டும்

 

தாயின்

நினைவில்

தவித்துப்போனான்

நானுமோர்

தாயாகிப்போனேன்

 

உன் நினைவுகள்

விழித்துக்கொள்ள

உறக்கமும்

கலைந்தது

Love Quotes in Tamil – Part 21

தோளில்

சுமைகளை

சுமந்த

தோழன்

மார்பில்

சாயும்

வரம்

கொடுத்தான்

கணவனாகி

 

என்னை தேடியபோதுதான்

உணர்ந்தேன் உன்னில் தொலைந்திருப்பதை.

 

நீ மௌனமாகும் போது என் கண்ணீர் பேசுகிறது

 

வெகு நாட்களுக்கு பிறகு

எனக்காக உறங்க போகிறேன் வந்துவிடாதே கனவில்.

 

நொடியேனும்

மறக்க முடியாமல்

உன்னையே

நினைக்க வைக்கும்

உன் நினைவுமோர்

எட்டாவது அதிசயமே.

 

நீ போகுமிடமெல்லாம் என் மனதையும் எடுத்துச்செல்

உன்னை தேடியே என்னை கொல்கிறது.

 

உன்முன்

உளறிக்கொட்டாமல்

சரளமாய் பேச…

கண்ணாடி

முன்னொரு

ஒத்திகை

 

மீண்டும் ஒரு பிரிவை தரும் எண்ணமிருந்தால் தொடராதே

Love Quotes in Tamil – Part 22

யாழிசை

மீட்ட வந்தேன்……

உன்

இதழிசையில்

மூழ்கிப்போனேன்

 

நினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை விக்கலில் சிக்கி தவிக்கின்றேன்

 

என்னையும் மீறி

உன்னை திரும்பி

பார்க்க வைக்கிறது…..

என்னை

கண்டுக்கொள்ளாமல் போகும்

உன் பார்வை

 

தொலைக்காத போதும் தேடுகிறேன் உன்னை

 

நிலவின்றி இரவு தொடரலாம்

உன் நினைவின்றி

என் விடியல் தொடராது.

 

இந்த நொடி

இப்படியே

நீண்டிட

வேண்டும்

 

முற்றுப்புள்ளி வைக்கும் போதெல்லாம்

அருகிலொரு புள்ளிவைத்து செல்கிறாய்….

 

பிரிந்திருந்த

நாட்களில் தான்

நம் காதல்……

விருட்சமாக

வளர்ந்திருக்கின்றது

என உணர்ந்தோம்

நாம் சேர்ந்தபோது

 

தீட்டிய

கத்தியைவிட

தீண்டும் உன்

பார்வை

கூர்மையாகவே

தாக்குகின்றது

 

கொட்டும் மழை

கொண்டுவந்து

சேர்த்தது…..

மறந்துப்போன

மழைக்கால

நிகழ்வுகளை

Love Quotes in Tamil – Part 23

கண்ணீரும்

கனமானது

உன்னால்

வந்தபோது

 

இரவின் பிடியில் சிறைப்பட்டிருக்கும்

நிலவைப்போல் உன் நினைவின் பிடியில் நான்…

 

பாசம் காட்ட

பல உறவுகள்

இருந்தாலும்…..

மனம்

களைப்பாகும் போது

இளைப்பாற தேடுவது

உன்னையே

 

தேய்பிறை நிலவுக்கு தான்

உன் நினைவுக்கு அல்ல…

 

உனக்காகவே என் வாழ்க்கை என்று

நீ சொன்னபோது தான்

என்னை எனக்கே பிடித்தது…

 

உனக்காக

காத்திருக்கும்

ஒவ்வொரு

நிமிடமும்

உணர்த்துகிறது

நீயில்லாத வாழ்க்கை

வெறுமை என்று…

 

உன்னருகில்

மௌனமும்

ஓர் அழகிய கவிதை தான்…

 

உன்

விரலிட்ட

பொட்டு

வட்ட

நிலவாக

நானுமோர்

பௌர்ணமியானேன்…

 

மனதுக்குள்

ரசித்தாலும்

மயங்கிப்போகிறேன்

விழிகளுக்குள்

உன்….

பிம்பம்

வந்துநிற்க

Love Quotes in Tamil – Part 24

ரசிக்க

காத்திருந்தபோது…நீ

இசைக்கவில்லை….

இன்று இசைக்க

காத்திருக்கின்றாய்

ரசிக்கும்

மனநிலையில்

நானில்லை

 

உன் பார்வையென்ன

மருதாணியா பட்டதும் சிவக்கின்றதே முகம்

 

கவிதைக்கு

வரிகள் கேட்டேன்……..

உன்னிதழின்

வரிகளைவிட

அழகிய

வரிகளில்லை

என்றான்

 

மனமின்றி

விடைகொடுத்தாய்

மரணித்தே

விடைபெற்றேன்

 

புகையும்

உன்

நினைவில்

புதைந்து

கொண்டிருக்கின்றேன்

 

உணர்வற்ற கவிதைக்கும்

உயிர் வருகிறது

நீ ரசிக்கும் போது

Love Quotes in Tamil – Part 25

பூ

தலைசாய்ந்தால்

தாங்கிக்கொள்ளும்

கிளையைபோல்

நான்

தலைசாய

நீ வேண்டும்

தாங்கிக்கொள்ள

 

சொல்லாமல் கொள்ளாமல் தழுவிச்செல்லும்

தென்றலைப்போல்

மனதை வருடிச்செல்கிறது

உன் நினைவுகள்

 

மறையும் வரை

திரும்பிவிடாதே

என்னுயிர்

வந்துவிடும்

உன்னுடன்

 

எழுதவில்லை

செதுக்குகிறேன்

உனக்கான கவிதையை

என் இதயத்தில்

 

மரணத்தை கொடுத்துவிடு

ஒரு நொடி வலி

மௌனத்தை கொடுக்காதே

ஒவ்வொரு நொடியும் மரண வலி

 

பார்வையில் மனதை

பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்…

 

சுழற்றியடிக்கும்

காற்றையும் எதிர்த்து

சுடர்விட்டெரிகிறது

அகல்விளக்கு….

பல ஆசைகளுடன்

என்னைப்போலவே

உன்னை வரவேற்க

 

அன்பு காட்டுவதில்

ஜெயிப்பது நீயென்றால்

உன்னிடம் தோற்பதும்

எனக்கு வெற்றியே…

 

இளகாத

உன் மனதால்

மெழுகாக

நானுருகி

வரிகள் பல

வடிக்கின்றேன்

கற்பனையில்

காதல் செய்து

Love Quotes in Tamil – Part 26

உன் தேடல் நானென்றால்

தொலைவதும்

ஒரு சுகமே

 

மயக்கும்

மல்லிகையை

கையில்கொடுத்து

மனதில்…..

அணையா

ஆசையை

மூட்டிச்சென்றான்

 

விழிகளை

திறந்தால்

நாணம்

தடைபோடுமென்று

விழிமூடி கொள்கிறேன்

உன் இதழோடு பேச

 

உன்

விழிகளை நோக்கும் போது

கண்களுக்குள் என்னை

காண்பதைபோல்…..உன்

மனதிலும் நானேயிருப்பேன்

என்ற எண்ணமே

நம் வாழ்க்கையை

அழகாக்குகின்றது

 

மரக்கிளையில்

சாய்ந்தேன்

உன்

நினைவுகள்

துளிர்விட்டது

 

வரிகளில்லா

அழகிய கவிதை

உன் விழிகளில் ரசித்தேன்…

 

அங்கே உன்

நிலையென்ன….என்ற

நினைப்பிலேயே

என் நிமிடங்கள்

நகர்ந்துக்கொண்டிருக்கு

 

உன்

தொடரலே

என்

உலகத்தை

அழகாக்குகின்றது

Love Quotes in Tamil – Part 27

பூவுக்குள்ளும்

பூத்திருக்கின்றது

உன்

காதல்

வாசனை

 

வேள்வியின்றி

எரிகின்றேன்

உன் விழித்

தீயில்

 

நம்

வாழ்க்கையை

வண்ணமாக்க….

உன்

கையை

தூரிகையாக்கினாய்

 

ஒற்றை

விழியில்

நோக்கினாலும்

எங்கும் நீயே

என்

இருவிழிகளாய்

 

நீ

தாமதிக்கும்

ஒவ்வொரு

நொடியும்

கடிகாரமுள்ளைவிட

அதிவேகமாகவே

துடிக்கின்றது

என்

இதயம்

Love Quotes in Tamil – Part 28

நீ

பொய்யாக

வர்ணிக்கும்

போதெல்லாம்…..

நாணம்

என்னை

மெய்யாகவே

அழகாக்குகின்றது

 

என்னைப்பற்றிய

கவலைகள்

எனக்கில்லை

அக்கறைக்கொள்ள

நீயிருப்பதால்……

 

கடற்கரையில்

கால் பதித்தேன்

உன் நினைவுகளும்

ஒட்டிக்கொண்டது…

 

தனிமையில்

பயணங்கள்

களைத்ததில்லை

துணையாக

உன்

நிழல்

இருப்பதால்…

Love Quotes in Tamil – Part 29

சிந்திக்க

பலயிருந்தாலும்

முந்திக்கொள்கின்றாய்..நீ

 

காவலன்

நீயானாய்

கைதி

நானானேன்

 

தள்ளாடிப்

போகின்றேன்…..

தென்றலில்

தள்ளாடும்

கூந்தலைப்போல்

உன்

கரம்

கன்னத்தில்பட

 

விரும்பியே

தொலைகின்றேன்

விலகிவிடாதே…

 

காதலின்

பிடியில்

சிக்கித் தவித்த

மலருக்கும்

ஆசை வந்தது

மரணிக்காமல்

வாழ……

 

சிறு ஊடல்

ஒரு காத்திருப்பில்

வளர்கிறது காதல்

 

மனதை

மயக்குகின்றாய்

மருதாணி

வாசனையாய்…..

 

 

என்னை

மௌனமாக்கி

நீ

விழியில்

பேசியே

வென்றுவிடுகிறாய்

 

மின்னலாய்

நீ வர

மழைச்சாரல்

மனதுக்குள்

 

உன்

மொழியில்லா

ஆறுதலில்

எனை

மறந்துப்போனேன்

 

முழுதாய்

மறைவதற்குள்

நிலவு விழித்துக்கொள்வதென்ன

உன் நினைவு

 

நீ

ரசிக்க

நானும் ஒரு

சிலையானேன்

 

முடியாத பயணம்

நான் தொடர வேண்டும்

உன் கரம் பிடித்து…

 

வெறுமையான

வாழ்க்கையும்

வசந்தகாலமானது

உன்னால்….

 

கடவுளை

அழைத்தேன்

காட்சித் தரவில்லை

என்னவரை

நினைத்தேன்

கண்ணெதிரே

தோன்றினார்

 

மொத்தமாய்

உன்

அன்பு

என்னை

ஆதிக்கம் செய்ய

சுத்தமாய்

மாறிப்போனேன்

நானும்

 

என் பிழைகளை

திருத்தும்

பிழையில்லா

கவிதை … நீ

Love Quotes in Tamil – Part 30

இதயக்கதவை

உன் நினைவுகள்

தட்ட……..

எட்டிப்பார்கின்றது

விழிகளும்

நீ வரும்

வழியை நோக்கி…….

 

எரிக்கும் உன்

பார்வைத்தீயில்

உருகும்

மெழுகாய் நான்….

 

நான் இரவில்

தூங்கிய நேரத்தை

விட உனக்காக

ஏங்கிய நேரமே

அதிகம்

Conclusion

எனவே, இவை தமிழில் மாணவர்களுக்கான சிறந்த வெற்றி ஊக்குவிப்பு மேற்கோள்கள். தமிழில் இந்த வெற்றி ஊக்கமளிக்கும் மேற்கோள்களை நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் பதிவை படித்தமைக்கு நன்றிகள் பல..!

Leave a Reply