பகவத் கீதை பொன்மொழிகள் : மன ஆற்றல் அதிகரிக்க உதவும் | karma bhagavad gita quotes in tamil

119 0
karma bhagavad gita quotes in tamil

Bhagavad gita quotes in tamil : பகவத் கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. பகவத் கீதை கடவுளின் பாடல் என்று அழைக்கப்படுகிறது. இந்த புத்தகம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன், அர்ஜுனன் ஒருமுறை எதிரியிடம் சென்று, அவனது உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் இருந்ததால் போரிட மறுத்துவிட்டார்.

இதைப் பார்த்த அவரது தேரோட்டி கிருஷ்ணன், தர்மத்திற்காகப் போராடும் போது உறவுகளில் தலையிடக் கூடாது என்று விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவம், யோகம் முதலியவற்றையும் சொன்னார். இந்த வசனங்களே பகவத் கீதை ஆகும் . இதில் கிருஷ்ணரின் 620 வசனங்களும், அர்ஜுனனின் 57 வசனங்களும், சஞ்சயனின் 67 வசனங்களும், திருதராஷ்டிரரின் ஒன்றும், மொத்தம் 700 வசனங்கள் மற்றும் 18 அத்தியாயங்கள் கொண்டது.

இந்நூல் பிரஸ்தான் த்ரயா என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது பிரம்ம சூத்திரங்கள், உபநிடதங்கள் மற்றும் பகவத் கீதையுடன் மூன்று அடித்தளங்கள். இதனால் பிரஸ்தானத்ரயம் என்று அழைக்கப்படுகிறது, பகவத் கீதை வாழ்க்கைக்கான பொன்மொழி, பகவத் கீதை தத்துவம் மற்றும் இந்த பகுதியில் உள்ள கவிதைகள் நம் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வர உதவும்.நம் வாழ்வில் வெற்றி பெறவும், மன ஆற்றலை அதிகரிக்கவும் உதவும் பகவத் கீதை மந்திரங்களைக் இங்கு பார்க்கலாம்.

Karma Bhagavad Gita quotes in Tamil | Bhagavad Gita in Tamil

-“எப்படி வாழ்வான் என்பவர்களுக்கு மத்தியில் இப்புடி தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்“.

-“மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும் ஆனால் அவ்வாறு செய்ய தவறுபவனுக்கும் அதுவே மிகப்பெரிய விரோதியாகும்“.

 

-“சில நேரங்களில் நாம் சரியான இலக்கினை தீர்மானிக்கிறோம். ஆனால் தவறான இலக்கிற்கு சென்றடைகின்றோம். ஒவ்வொரு செயலையும் யோசித்து செயல்படுத்துங்கள்”“.

 

-“காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், நீங்கள் தான் கொண்ட லட்சியத்தினை மாற்றக்கூடாது“.

 

-“யாராவது உங்களை ஒதுக்கி வைத்தால் கவலையேன்? யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறார்களோ அந்த தூரத்தில் வாழ கற்றுக்கொள். அதனால் எந்தவித நஷ்டமும் இல்லை. உன்னோடு நான் இருக்கிறேன்! அது போதாதா?“.

 

-“அடுத்தவர் வலி அறிந்து வாழ்கிறவன் யாரையும் காயப்படுத்தி பார்க்க மாட்டான் அவரது கண்ணீருக்கு காரணமாக இருக்க மாட்டான்“.

 

-“உங்களுக்கு வேலை செய்ய உரிமையுண்டு, ஆனால் வேலையின் பலனை பெற முடியாது. வெகுமதிக்காக நீங்கள் ஒருபோதும் செயலில் ஈடுபட கூடாது, செயலற்ற தன்மைக்காக ஏங்க கூடாது“.

 

-“புலன்கள் உலகில் உருவான இன்பங்களுக்கு ஒரு தொடக்கம் மற்றும் முடிவு உண்டு, மேலும் துன்பத்தை பிறப்பிக்கும் அர்ஜுனா“.

 

-“சுய உணர்தலில் நிலைநிறுத்தப்பட்டவர்கள் தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துகிறார்கள்“.

 

-“உங்களிடம் இல்லாததை நினைத்து கவலை கொள்வதை விட்டுவிட்டு கிடைத்ததை வைத்து பொறுமை கொண்டால் உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்“.

 

-“எதிர்ப்பார்ப்புகள் சில நேரங்த்தில் ஏமாற்றத்தையே தரும். கடமையை செய்து பலனை எதிர்ப்பராமல் இருப்பதே அநேக நேரங்களில் வழிவகித்திடும்“.

 

-“நாம் சில சமயங்களில் தன்னலமற்ற மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார், ஈகோ ஈடுபாடு இல்லாமல், நாம் விரும்புகின்ற வழியில் விஷயங்கள் நடக்கிறதா என்பதில் சிக்கிக்கொள்ளாமல். அப்போதுதான் நாம் கர்மாவுடைய பயங்கர வலையில் சிக்க மாட்டோம். நம் கடமைகளை தவிர்ப்பதன் மூலம் கர்மாவில் இருந்து தப்பிக்க முடியாது. உலகில் உயிர்வாழ, நாம் செயல்பட வேண்டும்“.

பகவத் கீதை வரிகள் | Bhagavad gita quotes in tamil

-“காலங்கள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும், தான் கொண்ட லட்சியத்தை மட்டும் நீங்கள் மாற்றக்கூடாது“.

 

-“எழுந்திரு, உன் எதிரிகளைக் கொன்று, செழிப்பான ராஜ்யத்தை அனுபவி“.

 

-“அதிகம் பேசாதவனை இந்த உலகம் அதிகம் விரும்புகின்றது அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கின்றது அதிகம் செயல்படுபவனையே கைகூப்பி தொழுகின்றது“.

 

-“நம்முடன் வாழ்பவரை புரிந்து கொள்வதற்கு நம்மை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்“.

 

-“கல்வி அறிவையும் பெற்ற செல்வத்தையும் இறுதி காலம் வரை மற்றவர்களுக்காக செலவிடுங்கள்“.

 

-“ஒரு பரிசு சரியான நபருக்காக சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில் கொடுக்கப்பட்டால், அதற்கு பதிலாக நாம் எதையும் எதிர்பார்க்காதபோது அந்த பரிசு தூய்மை ஆனது“.

 

-“நம்பிக்கை என்பது குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கின்றான்“.

 

-“மகிழ்ச்சி, மன அழுத்தம், அரவணைப்பு மற்றும் குளிர் போன்றவைகளுக்கு முகங்கொடுக்கும் சகிப்பு தன்மையை கற்று கொள்ள வேண்டும். மேலும் அத்தகைய இருமைகளை பொறுத்து கொள்வதன் மூலம் லாபம் அல்லது இழப்பு பற்றிய கவலைகளில் இருந்து விடுபட வேண்டும்“.

 

-“சலித்து கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தை பார்க்கின்றான் சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினை பார்க்கின்றான்“.

 

-“மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிடில் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெருஞ்சுமையாக இருக்கும்“.

strong woman karma Bhagavad Gita quotes in Tamil

-“ஒரு மனிதன் புலன் இன்பத்தில் நிலைத்திருக்கும் போது, ​​அவன் மீது ஈர்ப்பு எழுகிறது. ஈர்ப்பில் இருந்து ஆசை, உடைமை மோகம் எழுகின்றது, மேலும் இது பேரார்வம், கோபத்திற்காக வழிவகுக்கின்றது“.

 

-“பேரார்வத்தினால் மனதில் குழப்பம் ஏற்படுகின்றது, பின்னர் நினைவாற்றல் இழப்பு, கடமையை மறத்தல் ஆகியவை ஏற்படுகிறது. இந்த இழப்பில் இருந்து பகுத்தறிவின் அழிவு வருகின்றது, பகுத்தறிவின் அழிவு மனிதனை அழிவுக்கு இட்டுச் செல்கின்றது“.

 

-“உலகம் என்பது ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைப்பதில்லை. தேர்வு வைத்த பிறகே நாம் பாடம் கற்பிக்கப்படுகின்றது“.

 

-“சிக்கனம் என்பது ஒருவன் பணத்தினை எவ்வளவு குறைவாக செலவு செய்கின்றான் என்பதை பொறுத்தல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாக செ

 

-“எதை இழந்தீர்கள் என்பது அல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கின்றது என்பதே முக்கியம்“.

 

-“முடிவுகளில் உங்கள் உள்சார்ந்திருப்பதினை கைவிடுங்கள். மேலும் கவனத்தில் அசையாமல் இருங்கள். செயல்களும் முடிவுகளும் உங்களை தொந்தரவு செய்யாது“.

 

-“அரிய சாதனை அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவையல்ல விடாமுயற்சியின் மூலம் தான்“.

 

-“இருமைகளுக்கு அடிபணிய மறுப்பது உங்கள் புனித கடமை செய். அவர்களால் அசைவில்லாமல் இருங்கள். அல்லது உங்கள் மனம் தொடர்ந்து கொந்தளிப்பிலிருக்கும்“.

 

-“முன்னோக்கி செல்லும் போது கனிவாயிரு, ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது அவர்களுக்கு உதவுவார்கள்“.

 

-“ரகசியத்தினை வெளிப்படுத்தியவனுக்கும் துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி என்பது இருக்காது“.

 

-“சுயநல நடவடிக்கை உலகை சிறைப்படுத்துகின்றது. சுயலாப எண்ணம் இல்லாமல் சுயநலம் இல்லாமல் செயல்படுங்கள்“.

 

-“அவர்கள் எல்லாவற்றிலும் தங்களை காணும் ஞானத்தில் வாழ்கின்றார்கள்“.

 

-“எல்லாத் துன்பங்களுக்கும் இரு மருந்துகள் உள்ளன ஒன்று காலம் மற்றொன்று மெளனம் ஆகும்“.

 

-“எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகின்றார்கள்“.

 

-“நீங்கள் தைரியமான மற்றும் தைரியமானவர்களை காண விரும்பினால், வெறுப்புக்காக அன்பை திருப்பி தரக்கூடியவர்களை தேடுங்கள்“.

 

-“ஆசையில்லாத முயற்சியால் பயன் இல்லை முயற்சி இல்லாத ஆசையால் பயன் இல்லை“.

 

-“நம் தேவைக்கு வேண்டியது கிடைக்க வில்லை எனில் வேண்டியவர்களை கூட வேண்டாதவர்களாய் இணைத்து விடுகிறது நம் மனம்“.

 

-“இன்பமானவற்றை பின்தொடராமல் அல்லது துன்பத்தில் இருந்து விலகி செல்லாமல், துக்கப்படுவது இல்லை, ஆசைப்படுவது இல்லை, ஆனால் அவைகள் நடந்த படியே வருவதையும் நடக்கவும் அனுமதிக்கும் ஒருவர் எனக்கு மிகவும் பிரியமானவர்“.

 

Bahavathkeethai quotes in Tamil

“சண்டைக்கு பின் வரும் சமாதானத்தினை விட, என்றும் சண்டை இல்லாத சமாதானம் தான் வேண்டும்“.

 

-“பழமையை பற்றி ஒன்றும் தெரியாமல் புதுமையினை சிறப்பாக படைக்க முடியாது“.

 

-“அறிவு ஒன்று தான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்து கொண்டால் எல்லா விதமான பயங்களும் அகன்றுவிடும்“.

 

-“தவறு நேர்ந்து விடும் என அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது“.

 

-“நீ எதிர்பார்க்கின்ற பாசம் ஓரிடத்தில் தடை பட்டால் அதனால் ஏற்படும் வலி அதிகம் தான். ஆனால் அதை நீ உன்னை பக்குவப்படுத்த பயன்படுத்திக்கொள், கடினம் தான். ஆனால், இதுவே நிரந்தரம்“.

 

-“சில நேரங்களில் நாம் சரியான இலக்கை தீர்மானிக்கிறோம். ஆனால், தவறான இலக்கை சென்றடையும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுங்கள்“.

 

-“காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் தன் கொண்ட லட்சியத்தை மட்டும் மாற்றக்கூடாது“.

 

-“உங்கள் வாழ்வானது உங்களுடைய எண்ணத்தின படியே அமையும் எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்“.

 

-“பொய் என்ற கவசம் தன்னை காக்கும் என நம்புகின்றனர் அதை உண்மை என்னும் அஸ்திரம் உடைத்தெறியும் என்பதை மறந்து“.

 

-“உங்களது ஒவ்வொரு துளி கண்ணீர் துளிகளுக்கு பின்னும் நிச்சயம் ஒரு பலன் உண்டு நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.மனநிலை சம நிலையில் உள்ளவர்களால் மட்டுமே என்றும் உயர்நிலையை அடைய இயலும்“.

 

-“நெருப்பு விறகுகளை சாம்பலாக மாற்றுகிறது. சுய அறிவு உங்கள் மனதில் உள்ள இருமைகளின் அனைத்து செயல்களையும் சாம்பலாக்கி, உங்களுக்கு உள் அமைதியைத் தருகிறது“.

 

-“எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கிறது, தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கிறது“.

 

Bagavath Gita quotes ponmoligal in Tamil | Bhagavad Gita Quotes in Tamil

 

-“புகழ்பூத்த பெருமைகளுடன் மக்கள் மன்றத்தில் நாயகனாய் போற்றப்படுபவர், இழிவான செயல்களில் ஈடுபட்டு மானத்தை இழக்க நேர்ந்தால் அந்த நிலை மரணத்தை விட மோசமானது“.

 

-“இழந்ததை நினைத்து வருந்தாதே எதை நீ இழந்தாலும் அது இன்னொரு வடிவில் வந்தே தீரும்“.

 

-“ஆன்மீக விழிப்புணர்வு மலையில் ஏற விரும்புவோருக்கு, பாதை தன்னலமற்ற வேலை. இறைவனுடன் ஐக்கியம் என்ற உச்சத்தை அடைந்தவர்களுக்கு, அமைதி, அமைதி மற்றும் தன்னலமற்ற பணிதான் பாதை“.

 

-“இலட்சியம் என்ற ஒன்று இல்லா விட்டால் முயற்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் சிந்தித்து செயலாற்றுங்கள்“.

 

-“மற்றவரின் வாழ்க்கையை முழுமையாகப் பின்பற்றுவதை விட, உங்கள் சொந்த விதியை அபூரணமாக வாழ்வது சிறந்தது“.

 

-“மற்றவர்களின் நலனை எப்போதும் மனதில் கொண்டு உங்கள் வேலையைச் செய்யுங்கள்“.

 

-“காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே எதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்“.

 

-“உன் மனசாட்சிக்கு சரி என்ற தோன்றுவதை தயக்கமின்றி துணிவுடன் செய் வேறு எவரை கண்டும் அச்சம் கொள்ள தேவையில்லை“.

 

-“எப்பொழுதும் சந்தேகப்படுபவருக்கு இந்த உலகத்திலோ அல்லது வேறு இடத்திலோ எந்த மகிழ்ச்சியும் இல்லை“.

 

-“எல்லா உயிரினங்களிலும் இறைவனை ஒரே மாதிரியாகப் பார்க்கிறவர்கள், இறக்கும் அனைவரின் இதயங்களிலும் மரணமில்லாததைக் காண்கிறார்கள், அவர்கள் மட்டுமே உண்மையில் பார்க்கிறார்கள். எங்கும் ஒரே இறைவனைக் கண்டு தமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை“.

பக்தி பாதையில் உள்ளவனுக்கு தோல்வி கிடையாது.

 

தன்னை அறிந்தவன் ஆசைப்பட மாட்டான்!
உலகை அறிந்தவன் கோபப்பட மாட்டான்!
இந்த இரண்டையும் உணர்ந்தவன்…
துன்பப்படமாட்டான்!

 

காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் ஆத்மாவிற்கு நாசம் விளைவிக்கும் நரகத்தின் வாயில்கள்.
ஆகையால் இந்த மூன்றையும் தவிர்க்க வேண்டும்.

 

பெற்ற தாய் தந்தையை கைவிட்டவன் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும் வீண்,
அவன் செய்யும் பூஜைகளை நான் ஏற்பதில்லை…

 

இழந்ததை நினைத்து வருந்தாதே …!
எதை நீ இழந்தாயோ அது, இன்னொரு வடிவில் உன்னை வந்து சேரும்…

 

மனதில் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக்கொள்ளக் கூடாது.

 

இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை.
இவ்வழியில் சிறிது முன்னேற்றமும்.
மிக பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.

 

ஒரு நல்ல நண்பனே வாழ்வில் மிகச் சிறந்த வழிகாட்டி ஆவான்…

 

தோல்வியின் அடையாளம் தயக்கம்..!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்…!
துணிந்தவர் தோற்றதில்லை!
தயங்கியவர் வென்றதில்லை…!!

 

அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே.
ஆனால் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும்.

 

வாழ்க்கையின் இலட்சியம் மட்டுமே தேடப்படவேண்டிய செல்வம்.

 

இலச்சியம் என்ற ஒன்று இல்லாவிட்டால்
முயற்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்
சிந்தித்து செயலாற்றுங்கள்

 

பிராத்தனைகளை எப்போதும் கை விடாதீர்கள்…
அவை எப்போதும் எதிர்பாராத பலனை தரக்கூடியவை.

 

குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்…!
ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான்..
அன்பு மட்டும் தான்..!

 

நம்மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பை
அவர்களிடம் இருந்து பிரிந்த பின்னரே நாம் உணர்ந்து கொள்கிறோம்.

 

பகவத் கீதை வரிகள் (Bhagavad Gita Quotes in Tamil) பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

Leave a Reply